Wednesday, July 22, 2009

செல் போன் கூத்து


காற்றை விற்று கவிதை பேசுவோம்

"Missed Call" கொடுத்து அதிர வைப்போம்


"Nokia" விழிகளில் "SMS" பேசுவோம்

கல்லூரி மாணவர்களின் ஏழாம் அறிவு


"அய்யர் பூஜையில்" கையடக்க "கரடி"

பாட்டிகளுக்கும் கொடுப்போம் ஓர் "Blue Tooth"


பாரிமுனையில் இருந்துகொண்டு

தெருமுனையில் இருப்பதாக "உண்மை" விளம்புவோம்


பால்காரன் முதல வேலைகாரி வரை

யாரையும் விடவில்லை இந்த செல் பித்து


இருபதாம் நூற்றாண்டின் அற்புதமே

நீ தொலை பேசியா அல்லது தொல்லை பேசியா?

Tuesday, June 30, 2009

நாடோடிகள்



அடுக்கு மாடி கட்டிடம் கட்டுபவர்கள் நாங்கள்
நடுத் தெருவே எங்கள் நிரந்தர பங்களா

கட்டிடங்கள் பல உயர்த்தினாலும்
நாங்கள் தாழ்வாகவே இருக்கிறோம்

சாலை பணி செய்து மக்களின் பயணத்தை துரிதமாக்கினாலும்
எங்களின் வாழ்க்கை பயணம் மெதுவாகவே செல்கிறது

நாடோடிகளாய் திரியும் எங்களுக்கு
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது சாலப் பொருந்தும்

"டெண்டெர்" எடுக்கும் முதலாளியே
சுங்க வரி வசூலிப்பதில் பங்கு கேட்கவில்லை நாங்கள் மாறாக எங்கள்
"Tender"களை படிக்க வையுங்கள் என்றுதான் கேட்கிறோம்

எங்கள் குழந்தைகளின் குரல் கேட்கிறதா?
இப்படிக்கு நாடோடிகள்...









Saturday, June 27, 2009

தீவிரவாதம் - தேவை ஓர் மகாத்மா


சாத்தான்களின் இந்த வாதம்
சமுதாயத்தின் முடக்கு வாதம்
சில முட்டாள்களின் தவறிய நோக்கம்

பல இடங்களில் குண்டு வெடிப்பு
தேச துரோகிகளின் நல்ல நடிப்பு

மரணக் கட்டிலில் அனாதைகள் பிரசவிக்கப் படுகிறார்கள்
சாவுக் கோலத்தில் விதவைகள் உருவாக்கப் படுகிறார்கள்

ஓ கல் நெஞ்சே !
இவர்களின் கூக்குரல் உங்களுக்கு கேட்கவில்லையா?

வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்றோம் இந்த
கொள்ளயரிடமிருந்து சுதந்திரம் பெற தேவை
மீண்டும் ஓர் மகாத்மா!

தேவை ஓர் மகாத்மா

Friday, June 26, 2009

மேகம்



சூரிய தந்தையும் கடல் அன்னையும்


பெற்றெடுத்த வெண் பஞ்சுக் குழந்தை


வெளிர் நீல வானத்தின் வெள்ளை ஆடை


"விசா" இல்லாத உல்லாசப் பயணம்


தீட்டப்படாத ஓவியங்களின் அணிவகுப்பு


மலைகள்ளனிடம் கொஞ்சி விளையாட்டு


மழையாய் மீண்டும் பூமியில் சங்கமம்


தொடர்கிறது ஈசனின் தீரா விளையாட்டு



அணு ஆயுத சோதனை - ஓர் வேதனை



பூமி சுற்றும் காலப் புள்ளியில்
நாம் வருவதும் போவதும் ஓர் துளி
இடையில் எதற்கிந்த சோதனை?


பூமித்தாயின் இதயத்தை பிளக்க
இங்கு யாருக்கும் உரிமை இல்லை


அணு ஆயுத சோதனை என்பது
கிளையில் அமர்ந்து மரத்தை வெட்டுவதற்கு சமம்
நம்மை நாமே முட்டாளாக்க வேண்டாமே


"Nu-Clear" Test செய்து இவ்வுலகை


"All-Clear" செய்திடாதே


ஒ தேசத் தலைவர்களே இனி ஓர் புதிய விதி செய்வோம்
இப் பூமிதனை மாசின்றி வரும் சந்ததியினர்க்கு ஒப்படைப்போம்


Let's - clear this Nu-clear

"ஏர் பிரான்ஸ் ஃபளைட் 447 பயணிகளூக்கு ஓர் கண்ணீர் அஞ்சலி"




"ஏர் பிரான்ஸ்" பயணிகளே
நீங்கள் எங்கே மறைந்து இருக்கிறீர்கள்?
யாரிடமும் சொல்லாமல்
காற்றில் கரைந்தீர்களா?

"ஆகாயத்தில்" நிகழ்ந்ததால் தானோ இன்னமும்
"சிதம்பர ரகசியமாய்" இருக்கிறது?

ஓ குழந்தைகளே நீங்கள் கொடுத்த கடைசி முத்தம்
எங்கள் கன்னங்களை சுடுகிறதே?!

"Blackbox" சிலே முப்பது மணி நேர தகவல் கிடைக்கும் - ஆனால்
மூன்று விநாடி உங்களின் குரல் கேட்குமா?